கொரோனா வைரஸ் பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டின் சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைகள் துறை செயலாளர் அலெக்ஸ் அசார், ஏற்கனவே கொரானா வைரஸ் அமெரிக்கர்களுக்கு பரவுவதற்கான அபாயம் குறைவு என கூறப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறினார்.
அவசரநிலையை தொடர்ந்து சீனா சென்று திரும்பும் வெளிநாட்டு பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு வாரங்களுக்குள் சீனாவின் ஹூபே மாகாணத்திற்கு சென்று திரும்பிய அமெரிக்கர்களும் 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.