மெக்சிகோவில் வெடித்து சிதறிய எரிமலை அருகே தென்பட்ட வெளிச்ச கீற்று விண்வெளி மனிதர்கள் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள போபோகேட்பெட் (Popocatepetl) எரிமலை கடந்த திங்கள்கிழமை வெடித்து சிதறியது. இதையடுத்து சில நொடிகள் இடைவெளியில் இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் நோக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் வெளிச்சகீற்று ஒன்று கடந்து சென்றது.
இக்காட்சிகள் அப்பகுதியில் மெக்சிகோ அரசால் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவாகியிருந்தன. அந்த வீடியோ காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன. அதை பார்வையிட்ட பலரும், வெளிச்ச கீற்றை விண்வெளி மனிதர்களின் வாகனம் என்றும், வேறு சிலர் வானத்தில் இருந்து விழும் எரிகல் என்றும் கூறி வருகின்றனர்.