லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின், சிறைக் காவல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று லண்டனில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த மார்ச் மாதம் ஸ்காட்லாந்து யார்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
அவரது ஜாமின் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கான சிறைக் காவல் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், அவரது வழக்கை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் நீதிமன்றம், நிரவ் மோடியின் சிறைக்காவலை, பிப்ரவரி 27ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.