நீண்ட இழுபறிக்கு பிறகு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து இன்று வெளியேறுகிறது.
இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் "பிரெக்ஸிட்"க்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.
அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின் இங்கிலாந்து இன்று ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து முறைப்படி வெளியேறுகிறது.