சூரியனின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பதை காட்டும் மிகவும் துல்லியமான புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஹவாயில் நிறுவப்பட்டுள்ள டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. கொதிநிலையில் உள்ள பாத்திரத்தில் வறுபடும் பாப்கார்ன் போல சூரியனின் மேற்பரப்பு காணப்படுகிறது.
அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் முகமை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய தொலைநோக்கியான டேனியல் இனோய் சூரிய தொலைநோக்கி மூலம், சூரியனின் மேற்பரப்பில் உள்ள காந்தப்புலம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.