பிரேசிலில் கிராபைட், காகிதம் மற்றும் நீராவியை மட்டுமே கொண்டு, மின்சாரத்தை உற்பத்தி செய்து 22 வயது மாணவி அசத்தியுள்ளார், கெல்லி மொரேரா எனும் அந்த மாணவி, பெடரல் பல்கலை கழகத்தில் பயின்று வருகிறார்.
அவரது திட்டத்தின்படி, காற்றில் உள்ள நீராவியின் மூலக்கூறுகளிலிருந்து ஆற்றல் உருவாக்கப்பட்டு குடுவைக்குள் சேகரிக்கப்படுகிறது. இந்த ஆற்றல் கிராபைட் பசை பூசப்பட்ட தாள் மீது குவிக்கப்படும்போது மின்சாரம் உற்பத்தியாகிறது. இத்திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தேவையான மின்சார தேவையை பூர்த்தி செய்துகொள்ளலாம் என அந்த மாணவி தெரிவித்துள்ளார்.