கொரோனா வைரசினால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு சீனக்குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஊகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, தைவான், மலேசியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்நிலையில் ‘சீனாவின் ஊகான் நகரிலிருந்து வந்த குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் தனி சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களது உடல்நிலை நன்றாக உள்ளது’ என்றும் அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.