மெக்சிகோவின் வலிமை மிக்க போப்போ காட்டபெட்டி என்ற எரிமலை திங்கட்கிழமை இரவு வெடித்துச் சிதறியது.
எரிமலைக் குழம்பும் சாம்பலும் கக்கிய அந்த எரிமலையால் இரவு வானம் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தது. சுமார்600 மீட்டர் தூரம் வரை அது சாம்பலையும் தீக்கங்குகளையும் கக்கியது.
இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் எரிவாயு மற்றும் பாறைகள் வெடித்தன. மலைப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் அடிவாரத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.