ஆஸ்திரேலிய புதர் தீயில் இருந்து மீட்கப்பட்டு மீண்டும் வனத்துக்குள் விடப்பட்ட கோலா, தனது வாழ்விடம் முற்றிலும் உருகுலைந்து போனதை கண்டு திகைத்து போன நிகழ்வு நெஞ்சை நொறுங்க செய்கிறது.
புதர் தீயால் கடுமையாக பாதிக்கப்பட்ட அடிலெய்டில்(Adelaide) ஏராளமான வன உயிரினங்களும் தாவரங்களும் அழிந்துபோன நிலையில், கோலா ஒன்று தீயணைப்புத்துறை வீரர்களால் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது.
இந்த நிலையில் புதர் தீயின் தாக்கம் குறைந்துள்ளதால் ஐசக் என்று பெயரிடப்பட்ட அந்த கோலா, மீண்டும் அதன் வாழ்விடத்தில் விடப்பட்டது. தனது காடு முழுவதும் எரிந்து போனதாலும் வித்தியாசமான வாசனை வந்ததாலும் சற்று தயங்கி நின்ற ஐசக், கொஞ்ச நேரத்துக்கு பிறகு இயல்புநிலைக்கு திரும்பி மரம் ஒன்றில் தஞ்சமடைந்தது.