அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் நாய்கள் வண்டி மாரத்தான் போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
பனி படலங்களால் சூழப்பட்டுள்ள துலுத் நகரில் 36 வது ஜான் பியர்கிரீஸ் மாரத்தான் நேற்று தொடங்கியது. அங்கிருந்து வடக்கில் கிராண்ட் போர்டேஜு(Grand Portage)நோக்கி 482 கிலோ மீட்டருக்கு மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில் 14 அணிகள் பங்கேற்றுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு வெற்றியாளர் ரியான் ரெடிங்டன் முதலிலும் நடப்பு சாம்பியன் பிளேக் ஃப்ரீக்கிங் இரண்டாவதாகவும் சோதனைச் சாவடியை எட்டியநிலையில் நாளை காலை மாரத்தான் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.