ஜெர்மனியில் கிரேன் மூலம் அந்தரத்தில் மிதந்தவாறே பியானோ கலைஞர், பியானோ வாசித்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
அலைன் ரோச் எனும் அந்த கலைஞர் அதிகாலைநேரத்தில் கட்டிட வேலைக்காக பயன்படுத்தப்படும் கிரேனில், பியானோவுடன் இணைக்கப்பட்டுள்ள நாற்காலியில் அமர்ந்து செங்குத்தாக 60 மீட்டர் உயரும் வரையில் தூக்கப்பட்டார்.
தொடர்ந்து பியானோ அங்குமிங்கும் அசைய சற்றும் சலனமின்றி, காற்றில் தனது இசைத் திறமையை வெளிப்படுத்தினார்.
பியானோவுடன் மைக் கொண்டு இணைக்கப்பட்டிருந்ததால், தரையில் அமர்ந்திருந்தவாறு பார்வையாளர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்தனர்.