இந்தியாவில் நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் புறக்கணிக்ககூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகளை கொண்ட அந்த அமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் 2017இல் சேர்ந்தன. அந்த அமைப்பிலுள்ள நாடுகளின் தலைவர்களிடையேயான 19ஆவது மாநாடு இந்தியாவில் நடப்பு ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது.
அதில் கலந்து கொள்ளும்படி இம்ரான்கானுக்கு இந்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது. இந்நிலையில், இருநாடுகளிடையேயான உறவின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மாநாட்டை இம்ரான் கான் புறக்கணிக்கக் கூடும் என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.