அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.
மதுரோ மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என கூறி, தம்மை தாமே அதிபராக அறிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் குவைடோவை அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகரித்துள்ளன. மேலும் வெனிசுலா மீது பல்வேறு தடைகளையும் அந்நாடுகள் விதித்துள்ளன.
இந்நிலையில், காரகாசில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதுரோ, வெனிசுலா தொடர்பான அமெரிக்க கொள்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவின் பொய்களை அதிபர் டிரம்ப் ஒருநாள் புரிந்து கொள்வார் என்றும் தெரிவித்தார்.