சிரியாவில் 2 ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தில் காலூன்றி உள்ள பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் அவ்வபோது மோதல்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் சமாகா மற்றும் ஹவாய்ன் பகுதிகளில் உள்ள 2 ராணுவ முகாம்கள் மீது 400க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டதுடன், 90 பேர் படுகாயமடைந்தனர்.