கர்ப்பிணிகளுக்கு சுற்றுலா விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த புதிய விசா விதிமுறைகளை, நடைமுறைப்படுத்தவும் ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவுக்கு பயணமாகி வரும் கர்ப்பிணிகள் அங்கு குழந்தை பெற்றுக் கொள்வதன் மூலம், அவர்களது குழந்தைகளுக்கு எளிதாக குடியுரிமை கிடைக்கிறது.
இதனால், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுக் கொள்வதற்காகவே அமெரிக்கா வரும் சூழல் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்கும் வகையில், அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் பெண்களிடம், கர்ப்பிணியா என்றும், கருவுறும் திட்டம் இருக்கிறதா என்றும் கேள்விகள் எழுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.