கஸ்னவி ((Ghaznavi)) எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும், பாலிஸ்டிக் ரக ஏவுகணையை பாகிஸ்தான் பரிசோதித்துள்ளது.
அந்த ஏவுகணை, பல்வேறு வகையான ஆயுதங்களை சுமந்தபடி, தரையில் இருந்து பாய்ந்து சென்று 290 கிலோ மீட்டர் தொலைவில் தரையிலிருக்கும் இன்னொரு இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும்.
அந்த ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் பரிசோதித்துள்ளது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், இதற்கு பாகிஸ்தான் அதிபர், பிரதமர், ராணுவ தளபதி உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.