ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு கிராமம் மணலுக்குள் புதையுண்டு வரும் வீடியோ வெளியாகி உள்ளது.
துபாயில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தில் உள்ளது அல் மதாம் என்ற கிராமம் கட்டமைக்கப்பட்டிருந்தது.
இங்கு வணிக வளாகம், மருத்துவமனை மற்றும் பள்ளிவாசல் ஆகியவை கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாலைவனத்தில் ஏற்பட்ட காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக இப்பகுதியில் மணல் குவியத் தொடங்கியது.
இதன் காரணமாக இங்கிருந்த மக்கள் குடியிருப்புகளை அப்படியே விட்டு விட்டு வேறிடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் தற்போது பேய் நகரம் என அழைக்கப்படும் அல் மதாம் மணலுக்குள் புதையுண்டு வெறிச்சோடி காணப்படுகிறது.