ஸ்பெயின் நாட்டில் வீசிய பெருங்காற்று மற்றும் பேரலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போனது.
அந்நாட்டின் மல்லோர்கா என்ற இடத்தில் வீசிய சூறாவளிக்காற்றின் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் உருவான நுரை மல்லோர்கா நகர் பகுதியில் புகுந்தது. மேலும் கடல் நீரும் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக மூச்சுத்திணறியும் பல்வேறு காரணிகளாலும் 8 பேர் வரை உயிரிழந்தனர்.
அதிவேகக் காற்று காரணமாக குறிப்பிட்ட பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கேட்டலோனியா பகுதியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக 60 அடி உயரத்திற்கும் அதிகமாக அலைகள் வீசின.