நவீன உலகம் இதுவரை கண்டிராத வகையில், ஆஸ்திரேலியாவில், 3 மாதத்திற்கும் மேலாக, புதர் தீ பற்றிப்பரவி எரிந்து கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்த வாரங்களில், வெப்பமும், காற்றும் சற்று அதிகரிக்க கூடும் என்பதால், புதர் தீ, பரவுவது நிற்கும் என்று எதிர்பார்ப்பு வெகுதொலைவு இலக்காகவே மாறியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில், காஸ்பர்ஸ் ((Gospers)) மலைப்பகுதியில், கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் புதர் தீ பற்றியது.
ஏற்கனவே, தொடர்ச்சியான குளிர்காலத்தினாலும், மழைப்பொழிவு இல்லாத காரணத்தினாலும், ஏற்கனவே காய்ந்து கிடந்த மரங்கள், செடி, கொடிகள் உள்ளிட்டவை தீப்பற்றி எரிந்தன.
இதுவரையில், விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில், ஒரு கோடியே 60 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பிலான அடர் வனப்பகுதிகள், பாதுகாக்கப்பட்ட காடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்டவை புதர் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.