சீனாவில் வேகமாக பரவி வரும் கோரனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
300க்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பகுதியில் முதன்முதலாக ஒருவர் இந்நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
கடந்த வாரம் அமெரிக்கா வந்த அந்த நபர் மருத்துவ சோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அந்நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வூஹான் நகரில் இருந்தும் ஹாங்காங்கில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்காவின் நியுயார்க், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இதே போல் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. உலக சுகாதார அமைப்பு இந்த வைரஸ் பாதிப்பை ஆய்வு செய்து சர்வதேச அளவில் இதனை சுகாதார அவசர நிலையாக அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.