ஆஸ்திரேலியாவில் பரவி வரும் புதர்த்தீயின் பாதிப்பால் நிலக்கரி வெட்டி எடுப்பது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உலகின் மிகப்பெரிய கனிம நிறுவனமான பி.எச்.பி.(BHP) குழுமம் கவலை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் முதல் ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் புதர்த் தீயால் காட்டுவளம் அழிந்துள்ளதுடன், மாசு கலந்த புகைக்காற்று பரவி வருகிறது. இந்த புகைக் காற்றின் காரணமாக காட்சித் திறன் குறைந்து நியூ சவுத் வேஸ்சில் உள்ள தங்களது சுரங்கங்களில் கடந்த மாத நிலக்கரி உற்பத்தி பாதிக்கு மேல் குறைந்து விட்டது என பி.எச்.பி. நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதம் பற்றிய தீயால் இதுவரை 29 பேர் உயிரிழந்ததுடன், 27 மில்லியன் ஏக்கர் வனமும் எரிந்து சாம்பலாகி உள்ளது.