பேசியல் ரெக்கெக்னிஷன் தொழில்நுட்பத்தை தற்காலிகமாக தடை செய்யும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கு கூகுள் மற்றும் ஆல்பபேட் நிறுவன முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆதரவு தெரிவித்துள்ளார்.
தீங்கு விளைவிக்கக்கூடிய செயல்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த வாய்ப்பிருப்பதே இந்த தடைக்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். அதே சமயம் மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் பிராட் ஸ்மித், பேசியல் ரெக்கெக்னிஷன் தொழில்நட்பத்தை தற்காலிகமாக தடை செய்யும் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
இந்த நடவடிக்கை அறுவை சிகிச்சைக்கு குறுங்கத்திக்கு பதிலாக, இறைச்சி வெட்டும் கத்தியை ஐரோப்பிய யூனியன் பயன்படுத்துவது போல் உள்ளதாக பிராட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கி வரும் ஐரோப்பிய ஒன்றியம், அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் பேசியல் ரெக்கெக்னிஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த 5 ஆண்டு காலம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.