ஆஸ்திரேலியாவில் மீண்டும் பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் புழுதிப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐந்தாறு மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீயினால் வெம்மி வெதும்பிய ஆஸ்திரேலிய மக்கள், புகை மற்றும் சாம்பலினால் சுவாசிக்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் பெய்த மழையால் காட்டுத் தீ படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதீத குளிர்ச்சி காரணமாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கான்பெரா மற்றும் சிட்னி உள்ளிட்ட நகரங்களில் 2வது நாளாக கடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது.
கோழி முட்டை அளவிற்கு வந்து விழும் ஆலங்கட்டிகளால் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாலைவனப்பகுதிகளில் எழுந்து வரும் மிகப் பெரும் புழுதிப் புயலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.