தென் ஆப்பிரிக்காவில் குழிக்குள் பதுங்கியிருந்த காட்டுப் பன்றியை சிங்கம் ஒன்று தேடிப்பிடித்து வேட்டையாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
குரூகர் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சிலர், பெண் சிங்கம் ஒன்றின் நடவடிக்கையைக் கவனித்து வந்தனர். அப்போது பசியுடன் இருந்த பெண் சிங்கம் திடீரென அங்கிருந்து சிறிய குழியை தோண்டியது.
இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அதன் செய்கையை ஆர்வத்துடன் பார்த்த போது, குழிக்குள் இருந்து திடீரென நன்கு வளர்ந்த காட்டுப் பன்றியை வாயுடன் பற்றி இழுந்தது.
அப்போது சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பிக்க காட்டுப் பன்றி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்விக்குச் சென்று விடவே, நொடிப் பொழுதில் காட்டுப் பன்றியின் கழுத்தைப் பிடித்து அதன் சப்தத்தை நிறுத்திய சிங்கம், பின்னர் சாவகசமாக அதனைச் சாப்பிட்டது.