இணைய பயன்பாட்டுடன் தொடர்புடைய சர்வர்கள், ரவுட்டர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களின், 5 லட்சம் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை, ஹேக்கர் ஒருவன் கசியவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த ஹேக்கரின் தாக்குதலுக்கு ரிமோட் ஆக்சஸ் நுட்பத்தில் இயங்கும் அமேசான் ரிங் பெல் கேமிரா, ரிங் செக்யூரிட்டி கேமிரா உள்ளிட்ட கண்காணிப்பு கேமிராக்களும் தப்பவில்லை. இதனால், பிற ஹேக்கர்கள் உள்ளிட்டோர், எளிதில் மற்றவர்களின், சர்வர்கள் உள்ளிட்ட இணைய பயன்பாட்டுடன் கூடிய சாதனங்களில் உட்புகுந்து, சைபர் தாக்குதல் நடத்த கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது ரிங் பெல் செக்யூரிட்டி கேமிரா வாடிக்கையாளர்களிடம், பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை மாற்றுமாறு, அமேசான் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.