சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
ஷென்சன் நகரிலுள்ள பள்ளியொன்றில் பணிபுரிந்து வந்த இந்தியாவைப் சேர்ந்த பீரித்தி மகேஸ்வரி எனும் அந்த ஆசிரியர், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திங்களன்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் வெளிநாட்டவரான பிரீத்திக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று நோய் மற்றும் கடுமையான சுவாச கோளாறை ஏற்படுத்தி உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில், சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த 650 பேர் பலியாகினர். இந்நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கோரானா வைரஸ் பரவி வருகிறது.