இங்கிலந்து அரசக்குடும்பத்தில் இருந்து வேறு வழியின்றி விலகியதாக ஹாரி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் நடந்த விருந்து ஒன்றில் பங்கேற்று பேசிய ஹாரி, அரசக்குடும்பத்தில் இருந்து விலகியது தொடர்பாக முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.
தானும் தனது மனைவி மேகனும் மிகுந்த வருத்தத்துடன் அரசக்குடும்பத்தில் இருந்து வெளியேறியதாகவும் அதே சமயம், மனைவி மற்றும் மகன் ஆர்க்கியுடன் மிகவும் அமைதியான வாழ்க்கையை தேடுவதற்கு தனது அரச பதவியை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஹாரி கூறினார்.
Also Read : ஹாரி-மேகன் அரச தம்பதி விடைபெற்றது...
இங்கிலாந்து ராணி, அவரது இராணுவம் மற்றும் காமன்வெல்த்துக்கு தொடர்ந்து சேவை செய்வோம் என்று தானும் தனது மனைவி மேகனும் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.