கட்டுக்கடங்காத புதர் தீ மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது.
கடந்த சில மாதங்களாக கடும் கோடை வெயிலால் ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் புதர்த் தீ பற்றி பரவி, வன உயிரினங்களுக்கும் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் நியூசவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து உள்ளிட்ட மாநிலங்களில் 2 நாட்களாக பெய்த கனமழை வெளுத்து வாங்கி வருவதால் புதர்த்தீயின் தாக்கம் தணிந்துள்ளது. மேலும் விக்டோரியா மாநிலத்தின் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.