ஏமனில் ராணுவ முகாம்கள் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் 60 வீரர்கள் உயிரிழந்தனர்.
2015 ஆம் ஆண்டு ஏமன் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு ஹவுதி மக்கள், நாட்டின் சில இடங்களை கைப்பற்றி ஈரான் அரசின்ஆதரவுடன் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏமனின் வடகிழக்கில் உள்ள மாரீப் மாகாணத்தின் அல்-மிலா என்ற இடத்தில் ராணுவ முகாம்கள் மீது ஏவுகணைகள் கொண்டும், ட்ரோன்களை பயன்படுத்தியும் ஹவுதி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 60 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.