சீனாவால் அறிவிக்கப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான நபர்கள் புதிய வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரனா வைரசால் இதுவரை 45 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சீனாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லண்டனின் இம்பீரியல் கல்லூரியிலுள்ள சர்வதேச தொற்று நோய் ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் சீனா அறிவித்ததை விட அதிக எண்ணிக்கையில் 1,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வைரஸ் பரவியிருக்கும் சீனாவின் உஹான் பகுதிக்கு சென்று திரும்பிய தாய்லாந்து, ஜப்பான் நாட்டினர் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நகருக்கு சென்று திரும்பிய சீனாவின் பிற பகுதிகளை சேர்ந்தோர் வைரசால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்களா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.