அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை, அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கொண்டு வந்த தீர்மானம் அமெரிக்கர்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையின் மீதான பயங்கரத் தாக்குதல் என்று டிரம்ப்பின் சட்டவல்லுனர் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆறு பக்க ஆவணத்தை வெளியிட்ட டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளனர் . அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் காங்கிரஸை சீர்குலைக்க முயற்சி என்று கூறப்படும் குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை டிரம்ப் மீதான பதவிநீக்க தீர்மானம் செனட்டுகளின் சபையில் விவாதிக்கப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள டிரம்ப்பின் சட்டக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.