ஆஸ்திரேலிய புதர் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டும்பொருட்டு எகிப்து பிரமிடு மீது ஏறிய நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிங்விட்டலி என்ற பெயரில் சுவாரஸ்யமான வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமானவர் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி(Vitaly Zdorovetskiy). இவர், கிசாவில் உள்ள புகழ்பெற்ற பிரமிடு மீது ஏறி ஆஸ்திரேலிய புதர் தீ பாதிப்புக்கு நிதி உதவி செய்ய கோரி வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த ஆபத்தான முயற்சியைக்கு பின் கீழே இறங்கி வந்த விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியை அங்கு காத்திருந்த போலீசார், தடையை மீறி பிரமிடில் ஏறியதாக கைது செய்து 5 நாட்கள் சிறையில் அடைத்தனர்.