அமெரிக்காவில் ஆக்சிலேட்டர் தொடர்பான பிரச்சனையால் டெஸ்லா நிறுவனத்தின் 100க்கும் மேற்பட்ட கார்கள் விபத்தில் சிக்கியதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் 3 ஆகிய 3 மாடல்களை சேர்ந்த 127 கார்களில் ஆக்சிலேட்டரை அழுத்துவது தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகவும், இதனால் நேரிட்ட 110 விபத்துகளில் 52 பேர் காயமடைந்திருப்பதாகவும் அமெரிக்காவில் வாகன பாதுகாப்பு ஒழுங்குமுறை அமைப்புகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கார்களை ஸ்டார்ட் செய்து எடுக்கும்போது ஆக்சிலேட்டரை அழுத்துகையில் பிரச்சனை ஏற்படுவதாக புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆராயப்படும் என்று அமெரிக்க தேசிய போக்குவரத்து நெடுஞ்சாலை பாதுகாப்பு நிர்வாக அலுவலகம் தெரிவித்துள்ளது. புகார்கள் குறித்து டெஸ்லா நிறுவனம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.