கடந்த 70 ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்கு சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் இந்த ஆண்டு குறைந்து காணப்படுகிறது.
சீனாவின் தேசிய புள்ளிவிவர அமைப்பு வெளியிட்ட தகவலில் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரம் குறைந்துள்ளது. தற்போதைய சீனமக்கள் தொகை 146 கோடிக்கும் அதிகமானது.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என அரசு கட்டுப்பாடு 1970ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. தற்போது சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது அதற்கு ஈடாக அவர்களை கவனிக்கும் இளைஞர் கூட்டமும் உள்ளது.
30 முதல் 40 வயதுடையவர்கள் இரண்டாவது குழந்தை வேண்டாம் என தங்கள் தொழில் மற்றும் வாழ்க்கையை எண்ணி முடிவு எடுப்பதாலும் பிறப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.