கொரானா போன்ற மர்ம வைரஸ் தாக்குதலால் சீனாவில் ஏற்பட்டுள்ள இரண்டாவது மரணம் அந்த நாட்டிலும், ஜப்பான் மற்றும் தாய்லாந்திலும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சீன நகரமான உகானில், 69 வயதுடைய நபர் கொனரா வைரஸ் தாக்குதல் போன்ற அறிகுறிகளுடன் புதன் அன்று மரணமடைந்தார். இதே அறிகுறிகளுடன் ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அண்மையில் உகான் நகருக்கு சென்று வந்தவர்கள் என்பதால் அச்சம் நிலவுகிறது.
மேலும் சீனாவில் 41 பேர் கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2002 ல் தெற்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிர நுரையீரல் சுவாச பாதிப்பு நோய் 37 நாடுகளில் பரவி 800 க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கியது குறிப்பிடத்தக்கது.