தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியளித்து வளர்த்துவரும் போக்கை பாகிஸ்தான் அரசு கைவிட வேண்டும் என்று இங்கிலாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் பல்வேறு உலக நாடுகள் பங்கேற்ற ரெய்சானா மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் தெற்காசிய இயக்குநர் காரத் பெய்லி தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATFK கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்தது. பிப்ரவரி மாதத்திற்கு தீவிரவாதத்தை முழுசாக கட்டுப்படுத்தாவிட்டால், பாகிஸ்தான் பிளாக் லிஸ்ட் எனப்படும் கருப்புப் பட்டியலில் வைக்கப்படும். அதற்கு அனைத்து நாடுகளும் நிதியுதவி வழங்குவதை நிறுத்தி விடும்.