இங்கிலாந்தில் பழைய டைப் ரைட்டரை கொண்டு பல்வேறு வடிவங்களை, அப்படியே படமாக வரைந்து இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார்.
கட்டிடக்கலையில் பட்டம் பயின்று வரும் ஜேம்ஸ் குக், 5 வருடங்களுக்கு முன்பாக இந்த வேடிக்கையான முயற்சியை தொடங்கியுள்ளார். இதில், கருப்பு, சிவப்பு என்கிற இரண்டு வண்ணங்களை கொண்டு மட்டுமே படங்களை வரைகிறார்.
மனித உருவங்கள், கட்டிடங்கள், விலங்குகள் என அனைத்தையும் அப்படியே தத்ரூபாமக வரைகிறார். பெயிண்ட், ப்ரஷ் என எதுவுமின்றி வரையப்படும் ஒரு படத்தை முடிக்க, சுமார் 30 மணி நேரம் ஆகும் என குக் தெரிவித்துள்ளார்.