உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் ஆயுதப்படை பொது தலைமையகத்தின் துணைத் தளபதி அலி அப்துல்லாஹி, உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என்றார். ஏவுகணையை வீசிய ஆபரேட்டருக்கு கட்டளை மையத்தின் செய்தியைப் பெறுவதில் சிரமம் இருந்ததாக அவர் கூறினார்.
அமெரிக்க மின்னணு கூறுகளின் குறுகீடு காரணமாக ஈரானின் ரேடார் நெட்வொர்க்கில் இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார். அத்தகைய சாத்தியத்தை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெறுவதாக அலி அப்துல்லாஹி தெரிவித்தார்.