நேபாள புத்தாண்டையொட்டி, அந்நாட்டு மக்கள் பாரம்பரிய முறைப்படி உற்சாகமாகக் கொண்டாடினர்.
நேபாளத்தில் இந்து காலண்டர் முறைப்படி, மாக் (Magh) மாதம் முதல் நாளில் புத்தாண்டாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில், தலைநகர் காத்மாண்டுவில், தாரு இன மக்கள், புத்தாண்டு தினத்தை மாகி பண்டிகையாக பாரம்பரிய முறைப்படி கொண்டாடினர். பாரம்பரிய உடை அணிந்து, இசைக்கருவிகள் இசைத்து நடனமாடி மகிழ்ந்ததுடன், புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
புத்தாண்டு தினத்தில் தங்கள் சமூகத்தின் தலைவரை தாரு இன மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.