சீனாவின் உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பும் பாகிஸ்தானின் முயற்சி மீண்டும் ஒருமுறை தோல்வியைத் தழுவியது.
கடந்த மாதத்தில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனா மூலம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப பாகிஸ்தான் முயற்சி செய்தது. 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், காஷ்மீர் பிரச்சனை இருதரப்பு பிரச்சனை என்பதால் சர்வதேச தலையீட்டுக்கு இடமில்லை என்றும் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகியவை கைவிரித்துவிட்டன.
ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தலைமைப் பொறுப்பில் உள்ள ஃபிரான்சும், இந்த நிலைப்பாட்டில் திட்டவட்டமாக உள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சீனா மீண்டும் காஷ்மீர் பிரச்சனையை எழுப்ப முயற்சி செய்தது.
ஆனால், ஏற்கெனவே எடுத்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை என, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள பிற உறுப்பு நாடுகள் தெரிவித்துவிட்டதால் சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p