ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அந்நாட்டின் பிரதமராக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அமைச்சரவையை மாற்றி அமைக்க உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் புதினை சந்தித்த மெத்வதேவ், பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி, அதற்கான கடிதத்தையும் அளித்தார். இதனை ஏற்றுக் கொண்ட புதின், மெத்வதேவின் பணியை பாரட்டியதோடு, புதிய அமைச்சரவை அமைக்கும் வரை காபந்து அரசாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டதாக ரஷ்ய அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அதிபர் பாதுகாப்பு கவுன்சிலில் மெத்வதேவை நியமிக்க புதின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.