ஜெர்மனியில் உள்ள ஆகஸ்டஸ்பர்க்கில் நடைபெற்ற வாகன திருவிழாவுக்கு, ஹிட்லரைப் போல உடையணிந்து வந்த நபரால் சர்ச்சை உருவாகியுள்ளது.
கொடுங்கோல் ஆட்சி செய்த அடால்ப் ஹிட்லரைபோல உடையணிந்து வந்திருந்த அவரை, பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். அவருடன் அமர்ந்திருந்த மற்றொருவர், இரண்டாம் உலக போர் கால ராணுவ உடை மற்றும் தலைக்கவசத்தை போலவே அணிந்திருந்தார். ஹிட்லரைபோல காணப்பட்ட நபரை பிடித்து விசாரணை செய்யாமல், செல்போனில் ஆர்வத்துடன் படம்பிடித்த போலீஸ் அதிகாரியின் செயல், சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.