உக்ரைன் பயணிகள் விமானத்தை ஏவுகணைகள் தாக்கும் வீடியோ வெளியிட்ட நபரை ஈரான் ராணுவம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி ஈரான் தலைநகர் ஹெக்ரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 176 பயணிகள் உயிரிழந்தனர். தங்கள் ராணுவம் தவறுதலாக தாக்கியதுதான் விமான விபத்துக்கு காரணம் என ஈரான் பொறுப்பேற்றுள்ளது. இதனிடையே உக்ரைன் பயணிகள் விமானம் பறக்கத் தொடங்கி 30 விநாடிகளில் ஏவுகணைகளால் தாக்கப்படும் சிசிடிவி வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்து ஈரான் ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.