அமெரிக்காவில் மிக வயதான வார்சா இன மீன் ஒன்று மீனவரிடம் சிக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் புளோரிடாவின் மேற்கு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் போது ஜேசன் பாயல் (Jason Boyll) என்ற மீனவரின் தூண்டிலில் அரிய வகை மீன் சிக்கியது.
160 கிலோ எடை கொண்ட அந்த மீனுடன் மீனவர் பாயல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் தங்களின் நீண்ட கால ஆராய்ச்சித் திட்டத்திற்காக சேகரிக்கப்பட்ட மிக வயதான மீன் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மீனின் வயது 50 என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.