காட்டுத் தீயில் சிக்கி தத்தளித்து வரும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் பற்றி எரிந்துவரும் காட்டுத் தீயால் ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் அளவுக்கான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. தீயில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 2000 வீடுகள் மற்றும் ஏராளமான விலங்குகள் தீக்கிரையாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக இங்கு குளுமையான சூழல் நிலவுவதால் தீ பரவுதல் சற்று குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும், நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், புகை நகரமாக காட்சியளித்துவருகிறது. இந்நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின் சில பகுதிகளில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பொழியும் பட்சத்தில், இப்பகுதியில் காட்டுத் தீ அணைபடும் என கூறப்படுகிறது.