ஈராக்கில் காசிம் சுலைமானியை கொன்றதற்கு எதிராக செயல்படும் ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அவமானமாக விளங்குவதாக அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரானிய படைத்தளபதியான சுலைமானி பாக்தாத் நகரில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதையடுத்து அமெரிக்கா-ஈரான் இடையே போர்ப்பதற்றம் உருவானது. ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது அமெரிக்கா போர்த் தொடுக்காமல் இருக்க டிரம்ப்பின் ராணுவ அதிகாரத்தை குறைக்கும் தீர்மானத்தை ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் அத்தீர்மானம் நிறைவேறியது.