தாய்லாந்தில் செங்குத்தான பாறை ஒன்றில் 820 அடி உயரத்தில் பாராசூட்டுடன் சிக்கிக் கொண்ட வீரரை மீட்கும் சவாலான முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பட்டாலுங் மாகாணத்தில் தேசிய குழந்தைகள் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்கை டைவிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 9 ஆஸ்திரிய வீரர்களில் ஒருவரான ஜோகன்னஸ் கிராசரின்((Johannes Grasser)) பாராசூட், செங்குத்தான பாறை ஒன்றின் விளிம்பில் மாட்டிக் கொண்டது.
பாராசூட்டின் கிழிந்த துணி மற்றும் கயிற்றின் பிடிமானத்தில் 820 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஜோகன்னஸ் கிராசர், உதவிக் கோரி சத்தமிடவே, பொதுமக்கள் மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த மீட்புப் படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் வீரரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.