கொலம்பியாவில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர், சாலையில் சென்ற நாயை மிதித்து தாக்கியதால், அவருடனான ஸ்பான்சர்சிப் ஒப்பந்தத்தை பிரபல காலணி நிறுவனம் ரத்து செய்துள்ளது.
அந்நாட்டைச் சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான ஜாமி அலிஜாண்ட்ரோ, சக வீரர்களுடன் இணைந்து சாலையில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த நாயை அவர் மிதித்து தாக்கினார்.
இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், பிரபல காலணி நிறுவனமான அண்டர் ஆர்மர், அந்த வீரருடனான தனது ஸ்பான்சர்சிப் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்டர் ஆர்மர், ஒரு நிறுவனம் என்ற வகையில், விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு வன்முறையையும், நடத்தையையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூறியுள்ளது.
இதனிடையே நாயை தாக்கியதற்காக ஜாமி அலிஜாண்ட்ரோ மன்னிப்பு கோரியுள்ளார்.