ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி வரும் நிலையில் மழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துபாயில் பெய்த திடீர் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. துபாயில் கடந்த 2 நாள்களாக பரவலாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. ரஷ் அல் கய்மா என்ற இடத்தில் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது.
மணிக்கு 150 மில்லி மீட்டர் அளவுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் தற்போது பெய்துள்ள மழை கடந்த 24 ஆண்டுகளில் மிக அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது.