மெக்ஸிகோவில் மாடியில் இருந்து குதித்து சாகசம் செய்ய விரும்பி ஜன்னலில் சிக்கிக் கொண்டவரை மூதாட்டி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தைச் சேர்ந்த கோஸ்லோஸ்கி என்பவர் உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து பேஸ் ஜம்ப் எனும் சாகசம் செய்து வருபவர். கடந்த சில தினங்களுக்கு முன் இவர், மெக்ஸிகோவில் அதேபோன்று சாகசம் செய்ய நினைத்தார். அதன்படி உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சத்தில் இருந்து குதித்து பாராசூட்டை விரித்த போது, எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் பால்கனி பகுதியில் சிக்கிக் கொண்டது.
கோஸ்லோஸ்கியின் குரல் கேட்டு அங்கு வந்த மூதாட்டி ஒருவர் அவரைக் காப்பாற்றினார். இது தொடர்பான வீடியோ கோஸ்லோஸ்கியின் ஹெல்மட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.